ஒருதலை காதலால் நிகழ்ந்த விபரீதம்... பெண் உட்பட 4 பேர் கைது-போலீசார் விசாரணை

Update: 2023-03-04 10:10 GMT

கள்ளக்குறிச்சி அருகே பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அந்த பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

காந்தலவாடியைச் சேர்ந்த செல்வதுரை, அதே ஊரில் வசித்து வரும் ஷர்மிளா என்பவரை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஷர்மிளாவின் குடும்பத்தினர் வேறொருவருடன் கடந்த 2020ம் ஆண்டு அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், ஷர்மிளாவின் கணவர் வெளிநாடு சென்றுவிட்டதை அறிந்த செல்வதுரை, ஷர்மிளாவிற்கு தெரியாமல் வீடியோ எடுத்து, அவரை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது. கடந்த 27ம் தேதி செல்வதுரை மீண்டும் ஷர்மிளாவிற்கு பாலியல் தொந்தரவு தந்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். ஷர்மிளா தற்கொலை செய்துகொண்டதாக எண்ணி, அதிர்ச்சி அடைந்த செல்வதுரை, மற்றொரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து, செல்வதுரையின் உடலை தனது நண்பர்கள் 3 பேருடன் இணைந்து, அதே பகுதியில் ஷர்மிளா வீசிச்சென்றுள்ளார். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஷர்மிளா உள்பட 4 பேரைக் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்