இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் மறைந்த தினம் இன்று

Update: 2022-12-23 02:51 GMT

1930ல் நன்னிலத்தில் பிறந்த கைலாசம் பாலச்சந்தர், அண்ணாமலை பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டம் பெற்ற பின், ஒரு பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். 1950ல் சென்னையில் உள்ள மத்திய அரசின் ஏ.ஜி அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார்.

நாடகத்துறையில் மிகுந்த ஈடுப்பாடு கொண்டிருந்த பாலச்சந்தர், பல்வேறு மேடை நாடகங்களை எழுதி, இயக்கி பெரும் புகழ் பெற்றார் . 1964ல் எம்.ஜி.ஆரின் தெய்வத்தாய் படத்திற்கு வசனம் எழுதி, திரைபடத் துறையில் நுழைந்தார்.

இவரின் கதை வசனத்தில் உருவான சர்வர் சுந்தரம் படம், நாகேஷின் திரைபட வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. 1965ல் நீர்குமிழி படத்திற்கு கதை, வசனம் எழுதி இயகுனராக உருவெடுத்தார்.

பாலச்சந்தரின் திரைப்பத்தில் வரும் கதாநாயாகிகள் பெரும் பாலும் சுய சிந்தனை மிகுந்த, பெண் உரிமை பேசுபவர் களாக அமைக்கப்பட்டிருந்தது. இது திரை உலகை தாண்டி புதிய சமூகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அரங்கேற்றம் படத்தின் கதாநாயகி, ஒரு பாலியல் தொழிலாளி யாக சித்தரிக்கப்பட்டது அன்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் ரஜினிகாந்த்தை திரைபடத் துறைக்கு அறிமுகப்படுத்தினார்.

வறுமையின் நிறம் சிகப்பில், கம்யூனிசம் பேசும் கோபக்கார இளைஞராக கமல்ஹாசனை நடிக்க வைத்தார்.

அவரின் மனதில் உறுதி வேண்டும் படத்தில், பெண் உரிமை பேசும் செவிலியராக நடித்த சுஹாசினி பெரும் பாராட்டுதல் களை பெற்றார்.

பின்னர், சின்னத் திரையில் ஏராளமான தொடர்களை எழுதி இயக்கினர். 2014ல் தனது 84 வயதில் உடல்நலக்குறைவு காராணமாக காலமானார்.

தமிழ் திரைபட வரலாற்றில் முத்திரை பதித்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் மறைந்த தினம், 2014 டிசம்பர் 23.

Tags:    

மேலும் செய்திகள்