காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-04-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-04-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines;
- கல்வி நிலையங்களில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளையும், கட்டுக்கதைகளையும் மாணவர்களிடம் பரப்பக் கூடாது........ பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்....
- மாற்றுத் திறனாளிகள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக இருக்கும் சட்ட முன் வடிவு பேரவையில் தாக்கல்.... முதலமைச்சர் ஸ்டாலினின் முன்னெடுப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என மாற்றுத்திறனாளிகள் வரவேற்பு....
- வரும் கல்வி ஆண்டு முதல் அரசின் காலை உணவு திட்டத்தில் உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் வழங்கப்படும்... சட்டப்பேரவையில் அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு.....
- கல்வி நிறுவனங்களில் சாதிப்பெயர் இடம்பெறக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு... 4 வாரங்களில் சாதிப்பெயரை நீக்காத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு ஆணை...
- பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, ஆட்சியில் பங்கு இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்... திமுகவை வீழ்த்த எதிரணியில் உள்ள சக்திகளை ஒருங்கிணைப்பதாகவும் சூளுரை...
- மாநில சுயாட்சி என்பது பிரிவினையை தூண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து... மாநில உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும் விளக்கம்...
- அதிமுகவின் கொடி, பெயரை பயன்படுத்த டிடிவி தினகரனுக்கு தடைவிதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றார் ஈபிஎஸ்....... டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு....
- முதல்வர் ஸ்டாலின் உடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு... ராஜ்யசபா சீட்டுக்காக முதலமைச்சரை சந்திக்கவில்லை என கமல்ஹாசன் பேட்டி...
- வக்பு சட்டத் திருத்தத்தை எதிர்த்த மனுக்கள் தொடர்பாக மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ்....... வக்பு சட்டத் திருத்தம் 20 கோடி மக்களின் உரிமையை பறிப்பதாக உள்ளதாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம்....
- நெல்லையில், நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீண்டும் தாக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.... நண்பர் போல் பேசி வரவழைத்து, செல்போனை பறித்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தகவல்.... 2 தனிப்படைகள் அமைத்து மர்மநபர்களை தேடி வருவதாகவும், பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் சுரேஷ் பேட்டி....
- நெல்லை பாளையங்கோட்டை பள்ளி வளாகத்தில் மாணவர்களின் புத்தகப் பைகள் சோதனை... மாணவன், ஆசிரியர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை...
- ஐ.பி.எல்.லில் சூப்பர் ஓவர் வரை சென்றது, ராஜஸ்தான், டெல்லி அணிகள் மோதிய போட்டி.... இரு அணிகளும்188 ரன்கள் எடுத்ததால் சமன்... சூப்பர் ஓவரில் 12 ரன்கள் இலக்கை எட்டி, டெல்லி அணி த்ரில் வெற்றி...