Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11.04.2025) | 6 AM Headlines | ThanthiTV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11.04.2025) | 6 AM Headlines | ThanthiTV;

Update: 2025-04-11 01:03 GMT
  • பரபரப்பான அரசியல் சூழலில் சென்னை வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா... விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..... தமிழக பாஜக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் உடன் இன்று ஆலோசனை என தகவல்.....
  • சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நண்பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் அமித்ஷா... அதிமுக உடனான கூட்டணி குறித்து முக்கிய தகவல் வெளியாகலாம் என எதிர்பார்ப்பு.....
  • பாஜகவில் குறைந்தது 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக இருந்தால் தான் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட முடியும் என புதிய நிபந்தனை.. 2017-ல் பாஜகவில் இணைந்த நயினார் நாகேந்திரன், பாஜக மாநில தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் சிக்கல்....
  • சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் திட்டம்..... அமித்ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் என பதில்.....
  • பாஜக உடன் கூட்டணி வைப்பது அதிமுகவுக்கு பயன் தராது.... விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி....
  • பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி, ராமதாஸ் அதிரடி உத்தரவு... நிறுவனராக இருக்கும் தான், தலைவர் பதவியையும் ஏற்பதாக அறிவிப்பு...அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக தொடர்வார் என்றும் தகவல்......
  • தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிர்வாகிகளுடன், கட்சியின் நிறுவனர், தலைவர் ராமதாஸ் 3 மணிநேரம் ஆலோசனை... 2 மணிநேரத்திற்கு மேல் காத்திருந்த கட்சியின் பொருளாளர் திலகபாமாவுக்கு அனுமதி மறுப்பு..... குடும்பத்தினர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இரவு வரை நீடித்த பேச்சுவார்த்தை தோல்வி என தகவல்....
  • கோவை அருகே தனியார் பள்ளியில் பூப்பெய்திய மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமரவைத்த விவகாரத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு... பள்ளி முதல்வர் , தாளாளர், அலுவலக உதவியாளர் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை...
  • மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை பகுதியில் வடமாநில தொழிலாளர் குடியிருப்புக்குள் நுழைந்த காட்டுயானை..... தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்த வீடியோ காட்சிகள் வைரல்
Tags:    

மேலும் செய்திகள்