Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05-02-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05-02-2023) | Morning Headlines | Thanthi TV

Update: 2023-02-05 00:58 GMT

டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை பார்வையிடுகிறது அமைச்சர்கள் குழு... ஆய்வுக்குப் பின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான படிவத்தை இன்று மாலைக்குள் பூர்த்தி செய்து அனுப்பிவையுங்கள்.... பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அவைத்த தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவுறுத்தல்... 

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமியுடன், அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை... அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, ஆலோசித்ததாக தகவல்...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஆதரவு அளிப்பாரா? 7ம் தேதி வரை காத்திருக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் நழுவல்... 

இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுபவரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரிப்போம்... ஓபிஎஸ்ஸின் அறிக்கையை வெளியிட்டு

வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி...

பாஜகவின் பொம்மலாட்டங்களில் அடிக்கடி காட்சிகள் மாறும், தற்போது அதிமுகவின் மீட்சி தான் தேவை... திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கருத்து....

இடைத்தேர்தல் நடைபெறாமல் இருக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலினால் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதில்லை எனவும் பேச்சு...

சென்னை, திருச்சி, தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான நிலத்தை கையகப்படுத்தி தாருங்கள்.... தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியா வலியுறுத்தல்...

தமிழ்நாட்டின் விமான நிலைய வளர்ச்சிக்காக, மத்திய அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு... மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றுமாறும் மத்திய அமைச்சர் ஜோதி ராதித்யா சிந்தியாவிடம் கோரிக்கை...  




Tags:    

மேலும் செய்திகள்