Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05.12.2022) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2022-12-05 08:17 GMT

குஜராத் 2ம் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு மந்தம்...

முற்பகல் 11 மணி நிலவரப்படி 19 சதவிகித வாக்குகள் பதிவு...

அகமதாபாத் வாக்குச்சாவடியில் வரிசையில் ஜனநாயகக் கடமை ஆற்றினார் பிரதமர் மோடி...

குஜராத் மக்களால் ஜனநாயக திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவதாக பெருமிதம்...

ஜெயலலிதா நினைவிடத்தில் ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் மலர்தூவி மரியாதை...

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்தினார்

சதிவலைகளை அறுத்தெறிந்து திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்....

ஜெயலலிதா நினைவிடத்தில் ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் உறுதி மொழி...

டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு....

முதலமைச்சரை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியும் டெல்லி புறப்பட்டு சென்றார்...

ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஈபிஎஸ்க்கு தான் அழைப்பு, ஓபிஎஸ்க்கு இல்லை...

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் ஈபிஎஸ்க்கு மத்திய அரசு அழைப்பு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி...

Tags:    

மேலும் செய்திகள்