ஓசி சில்லி சிக்கனுக்காக நடந்த கத்தி குத்து... இளைஞர் வெறிச்செயல்

Update: 2023-06-11 02:08 GMT

சேலத்தில் இலவசமாக சில்லி சிக்கன் கேட்டு தகராறு செய்த இளைஞர், சிக்கன் கடை ஊழியரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம், கருங்கல்பட்டியில் தாவூத்கான் என்பவர் நடத்தி வரும் சிக்கன் கடையில், சதீஷ்குமார் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அங்கு, அதே பகுதியை சேர்ந்த முரளிதரன் என்பவர் இலவசமாக சிக்கன் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் அதேபோல் மதுபோதையில் தகராறு செய்த முரளிதரன், கடை ஊழியரான சதீஷ்குமாரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், படுகாயமடைந்த சதீஷ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த முரளிதரனை தேடி வந்த போலீசார், சேலம் பழைய பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்