"கடன்களை திருப்பி செலுத்தாதவர்கள் மீது ... கடும் நடவடிக்கை கூடாது" - நிதியமைச்சர்

Update: 2023-07-24 13:19 GMT

கொரோனா காலத்தில் கடன்களை திருப்பி செலுத்தாதவர்களிடம், கடனை வசூலிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க கூடாது என, வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்..


மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய சிவசேனா எம்.பி.தைர்யஷீல் மானே, கொரோனா காலத்தில் வங்கிகளில் கடன் பெற்று அதனை திருப்பி செலுத்த முடியாதவர்களிடம், வங்கிகள் கடுமையான முறையில் நடந்து கொள்வது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சில வங்கிகள் இரக்கமின்றி கடனை வசூலிப்பது குறித்த புகார்கள் தன்னுடைய கவனத்திற்கு வந்திருப்பதாக தெரிவித்தார். எனவே, கடனை வசூலிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்...

Tags:    

மேலும் செய்திகள்