வீல் சேரில் பெட்டிக்கடை - கரம் பிடித்த மாற்றுத் திறனாளி மணமக்கள்..அரசின் கண் பார்வை படுமா?

Update: 2023-04-23 10:55 GMT

கள்ளக்குறிச்சியில் மாற்றுத் திறனாளி ஜோடி ஒன்று இருவீட்டார் சம்மதத்துடன் மகிழ்ச்சியாக திருமண பந்தத்தில் இணைந்தனர்...

மெலாரிபட்டு கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், கடந்த 10 வருடங்களுக்கு முன் கட்டிட மேஸ்திரியாக இருந்தபோது மாடியில் இருந்து விழுந்ததில் இரு கால்களும் செயல் இழந்த நிலையில் வீல் சேரில் ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொண்டு தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்... குலதீபமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வளர்ச்சி தடை பட்ட மாற்றுத் திறனாளி பட்டதாரி சரண்யா நூலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார்... மகாத்மா காந்தி மாற்றுத்திறனாளிகள் நலசங்கம் சார்பில் நடத்தப்பட்ட திருமண சிறப்பு முகாமில் பங்கேற்ற இருவரும் சேர்ந்து திருமணம் செய்வதென முடிவு செய்த நிலையில், இன்று மணலூர்பேட்டை அகதீஸ்வரர் கோயிலில் இருவருக்கும் உறவினர்கள் ஆசியுடன் திருமணம் நடைபெற்றது. நம்பிக்கையுடன் வாழ்க்கையைத் துவங்கியுள்ள இத்தம்பதியின் வாழ்க்கை மேலும் வளமாக அரசின் உதவியை நாடியுள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்