கையால் மலம் அள்ளுவதை தடை செய்யும் சட்டம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Update: 2022-12-22 03:30 GMT

மனிதக் கழிவுகளை கையால் அள்ளுபவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தர வேண்டுமென தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கையால் மனிதக் கழிவுகளை அள்ள தடை மற்றும் மறுவாழ்வுக்கான சட்டத்தை முறையாக அமல்படுத்தக் கோரி யும், சட்டம் அமலாவதை கண்காணிக்க குழு அமைக்க கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், கையால் மலம் அள்ளுவதை தடை செய்யும் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கையால் மலம் அள்ளுபவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தரவும், மாற்று வேலைவாய்ப்பு வழங்கவும் அரசுக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மனித கழிவுகளை அகற்றும்போது விஷ வாயு தாக்கி உயிரிழந்த விவகாரங்களில், இதுவரை இழப்பீடு பெறாதவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்