சாதிக்க வயது ஒரு தடையா - 90 வயதில் பட்டம் பெற்ற மூதாட்டி

Update: 2022-12-12 12:58 GMT

கல்லூரியில் சேர்ந்த 71 ஆண்டுகளுக்குப் பிறகு 90 வயது மூதாட்டி ஒருவர் பட்டம் பெற்ற சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. வடக்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டத்தைப் பெற்ற மூதாட்டி ஜாய்ஸ் டிஃபாவ், அங்கு பட்டம் பெற்ற மிக வயதான நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 1951 இல் வடக்கு இல்லினாய்ஸ் மாநில ஆசிரியர் கல்லூரியில் சேர்ந்த டிஃபாவ், படிப்பை பாதியில் விட்டு விட்டு காதலனுடன் சென்று விட்டார். கணவர் இறந்து விடவே மறுமணம் செய்து கொண்ட டிஃபாவ்-க்கு 9 பிள்ளைகள். அதில் ஒருவர் இறந்து விட்டார். இவ்வளவு காலங்கள் ஆகியும் படிப்பை மறக்காத டிஃபாவ், மீண்டும் கல்லூரியில் சேர்ந்து 71 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பட்டப் படிப்பை நிறைவு செய்து அசத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்