உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி... மதுக் கோப்பையில் மிதந்த கேரள கால்பந்து ரசிகர்கள் - விற்பனை எவ்வளவு தெரியுமா?

Update: 2022-12-21 16:06 GMT

கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியின் போது மட்டும் கேரளாவில் ஒரே நாளில் 50 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. இறுதிப் போட்டியை கண்டு ரசித்த கேரள ரசிகர்கள் விடிய விடிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில இடங்களில் மோதல்களும் நடந்தன. மோதல்களில் பெரும்பாலானவை மது போதையால் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக ஞாயிறுகளில் அதிகபட்சமாக 33 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெறும் நிலையில், கால்பந்து இறுதிப் போட்டி அன்று மட்டும், சுமார் 50 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளதாக கேரள மதுபான விற்பனை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்