டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் 138வது பிறந்தநாள் - எம்.பி.க்களுடன் இணைந்து அஞ்சலி செலுத்திய மாணவர்கள்

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த தினத்தை ஒட்டி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பினரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த தினத்தை ஒட்டி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவரது உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, நாடாளுமன்ற எம்.பி.க்கள் மற்றும் மக்களவை, மாநிலங்களவை பொதுச் செயலாளர்கள் பங்கேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து, நாடாளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் Know your constitution என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆற்றுப்படை அமைப்பின் உதவி பெற்ற மாணவி டானியா உள்பட இந்தியா முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 27 மாணவ-மாணவிகள், எம்.பி.க்களுடன் இணைந்து தேசிய தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வாய்ப்பை பெற்றனர்.

தொடர்ந்து காரைக்காலை சேர்ந்த கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி டானியா, டாக்டர் ராஜேந்திர பிரசாத் வாழ்க்கை மற்றும் பங்களிப்பு குறித்து சுமார் 3 நிமிடம் உரையாற்றினார்.

X

Thanthi TV
www.thanthitv.com