'ட்ராக் KD' செயலி அறிமுகம் செய்த டிஜிபி சைலேந்திரபாபு | Track KD App | Dgp Sylendra Babu

Update: 2022-11-26 05:52 GMT

'ட்ராக் KD' என்ற செயலியை, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிமுகம் செய்து வைத்தார். தமிழகத்தில், சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளின் விவரங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கும், மாதம் தோறும் அவர்களின் நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த செயலியில் 39 மாவட்டங்கள் மற்றும் 9 ஆணையரகங்களில் உள்ள 30,000-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் சரித்திரப்பதிவேடுகள் பதிவேற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் இவர்களின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்