"கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு விவகாரம் "- சசிகலா ட்வீட்

Update: 2023-04-01 02:29 GMT
  • கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, தவறு இழைத்தவர்கள் மீது தமிழக அரசு கடுமையான தண்டனை பெற்றுதர வேண்டும் என்று, சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
  • அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ரவுடிகளால் நாளுக்கு நாள் தொடர்ந்து அராஜகங்களாலும், அட்டூழியங்களாலும் பொதுமக்கள் அவதியடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
  • குறிப்பாக வணிகர்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
  • சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும்.
  • இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
  • கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக போராடி வருவதை சுட்டிக்காட்டியுள்ள சசிகலா, தவறு இழைத்தவர்கள் மீது தமிழக அரசு கடுமையான தண்டனை பெற்றுதர வேண்டும் என்று,வலியுறுத்தியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்