அதிகளவில் சர்க்கரை நோய் மாத்திரைகளை உட்கொண்டு உயிருக்கு போராடும் தாய்.. மகள் எடுத்த சோக முடிவு..

பெரிய குளம் அருகே தாய், மகள் இருவரும் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், சிகிச்சை பலனின்றி மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-11-28 05:06 GMT

தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தை சேர்ந்த தம்பதி நாராயணசாமி- சுமத்திரா தம்பதியின் ஒரே மகள் மதுமிதா. இவர், பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பு முடித்து விட்டு தேனி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். மருத்துவ படிப்பு மற்றும் வீடு கட்டுவதற்காக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனஉளைச்சல் அடைந்த மதுமிதாவும், அவரது தாயும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தனர். மதுமிதா பூச்சி மருந்தை குடித்தும், தாய் சுமித்ரா சார்க்கரை நோய் மாத்திரைகளை அதிகளவிலும் எடுத்துக் கொண்டதால், ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதுமிதா உயிரிழந்த நிலையில், தாய் சுமித்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்கொலைக்கு தந்தை மற்றும் தந்தையின் உறவினர்களே காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலைக்கு முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்