ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பூக்குழியில் விழுந்தவர் மரணம் - பகீர் வீடியோ
அருப்புக்கோட்டையில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் திருவிழாவில் விபத்து ஏற்பட்டது. பூக்குழியில் இறங்கிய முத்துக்குமார் என்பவர் நிலைத்தடுமாறி விழுந்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்