தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை அழித்தொழிக்க முயலும் தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளவே மாட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். செங்கல்பட்டில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கல்வி நிதி வழங்க, மத்திய அமைச்சர் பிளாக் மெயில் செய்வதாக குற்றம்சாட்டினார். ஒரு சில தடைகள் மட்டும் இல்லை என்றால் தமிழ்நாட்டின் வளர்ச்சி இன்னும் வேகமாக இருந்திருக்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.