காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (25.07.2025) | 9 AM Headlines | ThanthiTV
- திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில், 11ஆவது நாளாக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிஐ...நகை காணாமல் போனதாக புகார் அளித்த நிகிதாவிடம் சிபிஐ விசாரணை...
- 2018ஆம் ஆண்டு, கள்ளக்காதலுக்காக மகன், மகளை கொலை செய்த வழக்கில் 'பிரியாணி' அபிராமி குற்றவாளி...
- நாடாளுமன்றத்திற்கு "குட்பை" சொல்லி விட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி....
- பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்....
- திமுக அரசு ஃபெயிலியர் failiure மாடல் அரசு என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்....
- முதல்வரை பார்க்க இரவு 11 மணியளவில் அப்போலோ மருத்துவமனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை,....
- மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு....
- இந்தியாவில் முன்னேற்றத்தை தீர்மானிப்பது ஆங்கில கல்வி என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கருத்து....
- இந்தியா - இங்கிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து...
- இங்கிலாந்தின் ஸ்காட்ச் விஸ்கி, ஜின்னுக்கான வரி 150 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக குறையும்...
- தடை வர்த்தக ஒப்பந்தத்தால் இந்திய உணவு பொருட்களுக்கு 95 சதவீத வரி விலக்கு....
- இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களை வாக்காளர் பட்டியலில் அனுமதிக்க முடியாது...பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஒளிவுமறைவில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம்...
- மாநிலங்களவைக்கு திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வில்சன், சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் இன்று பதவியேற்பு...திமுக கூட்டணி சார்பில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன், அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகியோரும் பதவியேற்பு....