ஹெலிகாப்டர் விபத்தில் உயிரழிந்த ஈரான் அதிபர்... விரைவில் காத்திருக்கும் அதிபர் தேர்தல்

Update: 2024-05-22 06:23 GMT

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரழிந்த ஈரான் அதிபர்... விரைவில் காத்திருக்கும் அதிபர் தேர்தல்

ஈரானில் ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததை அடுத்து, வருகின்ற ஜூன் 28ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் மறைந்த அதிபர் ரைசியின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்த நிலையில், இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளது, ஈரான் அரசு. உயர்மட்ட விசாரணை குழுவின் தலைவராக ஈரானின் ஆயுதப் படைகளின் தலைமை தளபதி முகமது பாகேரி நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் ரைசியின் மறைவுக்கு 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரைசியின் உடல் தலைநகர் டெஹ்ரானுக்கு கொண்டு வரப்பட்டது. ஏராளமான மக்கள் கண்ணீர் மல்க அதிபரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்