200 அடி நீளம்.. 2.5 லட்சம் டன் எடை... உலகின் மிகப்பெரிய சொகுசு பயண கப்பல் ரெடி

Update: 2024-01-04 07:12 GMT

உலகின் மிகப் பெரிய பயண கப்பலாக உருவாக்கப்பட்டுள்ள ஐ கான் ஆஃப் தி சீஸ் (Icon of the seas) வரும் 27-ம் தேதி தமது முதல் பயணத்தை தொடங்க உள்ளது. ஆயிரத்து 198 அடி நீளம் கொண்ட இந்த பிரம்மாண்ட பயண கப்பல், 20 தளங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் தங்கும் வசதிகளை கொண்டுள்ளது. இந்த கப்பல், வரும் 27-ம் தேதி மியாமியில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பிரம்மாண்ட பயண கப்பல் தற்போது போர்ட்டோ ரிக்கோவில் உள்ள போன்ஸ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டுகளிப்பதுடன், ​ஒளிப்படங்களும் எடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்