கடும் கண்டனம் தெரிவித்த அன்புமணி ராமதாஸ் | anbumani ramadoss

வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமான பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்களை கைது செய்ததற்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், காவல்துறையின் செயல் அதிர்ச்சியளிப்பதாகவும், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது தமிழக அரசு தன்னிச்சையாக கட்டுமானப் பணிகளை தொடங்கியது நியாயமல்ல என குறிப்பிட்டார். மேலும், பார்வதிபுரம் மக்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற கோரியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com