சேலம் விமான நிலைய விரிவாக்கத் திட்டம்.. "மாநில அரசு இன்னும் நிலம் வழங்கவில்லை"
சேலம் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு மாநில அரசு இன்னும் நிலம் வழங்கவில்லை. என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. மக்களவை உறுப்பினர்கள் சின்ராஜ் மற்றும் பார்த்திபன் ஆகியோர் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங், சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்காக மாநில அரசிடமிருந்து 446 ஏக்கர் நிலம் தேவைப்படும் என கணித்துள்ளதாக கூறியுள்ளார். திட்டத்திற்கு தேவையான நிலத்தை மாநில அரசு இன்னும் வழங்கவில்லை என பதிலளித்துள்ளார்.