"சாதிய அடையாளங்கள் உள்ள உணவகங்கள் அகற்றப்பட வேண்டும்" - திருமாவளவன்
சாதிய அடையாளங்கள் உள்ள உணவகங்கள் அகற்றப்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனி ஏவிஎம் திரையரங்கில், இயக்குனர் ராஜாஜி இயக்கத்தில் உருவான "அம்புநாடு ஒம்பது குப்பம்' திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை பார்த்தப் பின் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், சாதிய அடையாளத்துடன் பெயர் கொண்ட உணவகங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும், இதனை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து செல்வோம் என்றும் கூறினார்...