#pmmodi | #tamilnadu | #bjp
மீண்டும் தமிழகத்தில் பிரதமர் மோடி...இன்று பாஜகவின் டார்கெட் பாயிண்ட்?
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் இன்று மாலை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி ஏற்கனவே கோவை, சென்னை, சேலம், வேலூர் உள்ளிட்ட இடங்களில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று கேரள மாநிலம் திருச்சூர் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டி பகுதியில் இருக்கும் கேம்பிரிட்ஜ் பள்ளி ஹெலிகாப்டர் இறங்குதளத்திற்கு பிரதமர் மோடி வருகிறார்.
பின்னர், கார் மூலம் அகஸ்தியர்பட்டி பிரச்சார பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் வந்தடைகிறார். தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர், அதன் பின்னர் மாலை 5:20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்றடைகிறார்.
இதனைத் தொடர்ந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.