வடமாநில இளைஞர்களை அடித்து துவைத்த ஊர் மக்கள்... அதிர வைத்த வீடியோ

செம்படமுத்தூர் அருகே பெண் ஒருவரிடம் இருந்த குழந்தையை 3 வடமாநில இளைஞர்கள் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து 3 பேருக்கும் தர்மஅடி கொடுத்த கிராம மக்கள், அவர்கள் வந்த ஆட்டோவையும் அடித்து உடைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், படுகாயமடைந்த இளைஞர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடத்தல் சம்பவத்தின்போது காயம் அடைந்த குழந்தையின் தாய் சவுமதியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் பெத்தாளப்பள்ளி, செம்படமுத்தூர் கிராம நிர்வாக அதிகாரிகள் அளித்த புகார்படி 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குழந்தையை கடத்த முயன்றதாக குழந்தையின் தாய் சவுமதி அளித்த புகார் பேரில் அசாமை சேர்ந்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com