தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பிய ஜெயராம் ரமேஷ்

Update: 2024-05-22 13:28 GMT

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 28 ஆயிரம் வாக்குகள் அதிகரித்தித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தில் என்ன நடக்கிறது?என கேள்வி எழுப்பியுள்ள அவர், இறுதி வாக்குப்பதிவு நிலவரத்தில் மொத்தம் ஒரு கோடியே 70 லட்சம் வாக்குகள் கூடுதலாக இருப்பது அசாதாரணமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். எங்கெல்லாம் பாஜக வலுவாக தோற்குமோ அந்த தொகுதிகளில் எல்லாம் அதிக வாக்குப்பதிவு சதவீத முரண்பாடுகள் காணப்படுவதாகவும் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்