சென்னை டூ திருச்சி ரூ.13,000, சேலம் ரூ.11,500 - அதிர்ச்சியில் உறைய வைத்த டிக்கெட் விலை

Update: 2023-11-10 07:36 GMT
  • சென்னை டூ திருச்சி ரூ.13,000, சேலம் ரூ.11,500 - அதிர்ச்சியில் உறைய வைத்த டிக்கெட் விலை
  • தீபாவளிப் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுக்கும் நிலையில், விமானக் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.\
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள், சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.
  • தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் டிக்கெட்டுகள் இல்லாத நிலையில், அரசு சிறப்பு பேருந்துகளிலும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகமாக உள்ளதாக கருதும் பயணிகள், விமானப் பயணத்தை விரும்புகின்றனர்.
  • சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, சேலம், மதுரை, கோவைக்கு செல்லும் விமானங்களில் அதிக அளவில் பயணிகள் பயணிக்கின்றனர்.
  • இன்றும், நாளையும் விமானங்களில் பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்பனையான நிலையில், ஒரு சில உயர் வகுப்பு டிக்கெட்டுகள் மட்டுமே உள்ளன.
  • சென்னை-சேலம் இடையே வழக்கமாக 2 ஆயிரத்து 390 ரூபாய் கட்டணமாக உள்ள நிலையில், இன்றும் நாளையும் 11 ஆயிரத்து 504 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
  • சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 13 ஆயிரத்து 287 ரூபாயும், கோவைக்கு 13 ஆயிரத்து 709 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
  • சென்னையில் இருந்து திருச்சிக்கு 13 ஆயிரத்து 86 ரூபாயும், மதுரை 13 ஆயிரத்து 415 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்