மதுரையில் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மதுரையில் பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப மாநிலச் செயலாளர் விஷ்ணு பிரசாத் என்பவர் ஒட்டியுள்ள சுவரொட்டிகளில், வன்முறையைத் தூண்டும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இதுகுறித்து பா.ஜ.க. தலைமை வருத்தம் தெரிவிப்பதுடன், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மதுரை மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.