"SI-ய வரச்சொல்லு... யார பாத்து குடிச்சிருக்கேன்னு சொன்ன..?"புல் போதையில் போலீசாரிடம் அட்ராசிட்டி
சென்னையில் மதுபோதையில் கார் ஓட்டிய வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அபிபூர் ரகுமான்... இவர் காமராஜர் சாலையில் அதிவேகமாக காரை ஓட்டி, ஆட்டோ மீது மோதியுள்ளார். ஆட்டோ ஓட்டுநர்கள் இவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவரை போலீசார் அழைத்து வந்தனர். அப்போது, தான் மது அருந்தவில்லை எனக் கூறி வழக்கறிஞர் அலப்பறையில் ஈடுபட்டார். மருத்துவப் பரிசோதனையில் அவர் மது அருந்தி இருப்பது தெரியவந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.