இருசக்கர வாகனத்திற்குள் பதுங்கிய 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு

சென்னை வேப்பேரியில் இருசக்கர வாகனத்திற்குள் புகுந்த சாரைப்பாம்பு பாதுகாப்பாக பிடிக்கப்பட்டது.;

Update: 2022-03-06 02:37 GMT
சென்னை வேப்பேரியில் இருசக்கர வாகனத்திற்குள் புகுந்த சாரைப்பாம்பு பாதுகாப்பாக பிடிக்கப்பட்டது. பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இருசக்கர வாகனத்திற்குள் புகுந்த பாம்பு குறித்து, தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், விரைந்து வந்த வீரர்கள் இருசக்கர வாகனத்தின் இருக்கையை கழற்றி, அதில் பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்