"பாம்பு கடிக்கு சிகிச்சை அளியுங்கள்" - பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞர்

மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பாம்புடன் புகுந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-02-07 03:15 GMT
மன்னார்குடி அரசு  மருத்துவமனைக்கு பாம்புடன் புகுந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனைக்கு கையில் 5 அடி நீளம் கொண்ட பாம்புடன் இளைஞர் ஒருவர் வந்தார். தன்னை பாம்பு கடித்து விட்டதாகவும், சிகிச்சை அளிக்கும்படி மருத்துவனை உள்ளே செல்ல அனுமதிக்கும்படி கூறினார். அவரை தடுத்து நிறுத்திய காவலர், பாம்பை வெளியே விட்டு வந்தால் சிகிச்சை அளிக்க அனுமதிப்பதாக தெரிவித்தார். இதை காதில் வாங்காத அவர், அங்கிருந்து பாம்புடன் சென்று விட்டார். இளைஞர் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்