தேவாலயத்தில் உண்டியலை திருடிய நபர் - காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தேவாலயத்தில், உண்டியலைத் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-11-27 02:38 GMT
ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே உள்ள சி.எஸ்.ஐ நல்மேயப்பர் தேவாலயத்தின் முகப்பு பகுதியிலிருந்த உண்டியலை,  மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து ஆலங்குளம் புதூர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் உண்டியலை திருடியது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்