தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பரவல் - பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது?
தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பரவல் - பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது?;
தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பரவல் - பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது?
தமிழகத்தில் ஜூலை மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று பரவல் கணிசமாக குறைந்து வரும் நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து, பள்ளி கல்வித் துறையில் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், நடப்பு கல்வி ஆண்டுக்கான கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கிவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,மாணவர்களுக்கான பாட புத்தகங்கள் விநியோகங்களையும் தொடங்கி வைத்தார். இதன்மூலம், நாளை முதல் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில்,பள்ளிகளில் தூய்மை பணிகளும், பள்ளிகளை திறப்பதற்கான ஆயத்தப் பணிகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஜூலை மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஜூலை இரண்டாவது வாரத்தில், முதல்கட்டமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்,இதுகுறித்த அறிவிப்பை, தமிழக அரசு விரைவில் வெளியிடலாம் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .