"தீபாவளிக்கு வாங்கிய உடை சரியான அளவில் இல்லை - மாற்றித் தர மறுத்த ஜவுளிக் கடை மீது வழக்கு"

அளவு சரியில்லாத துணியை மாற்றித் தர மறுத்த துணிக்கடை நிர்வாகம் மீது 11 வயது சிறுமி தொடுத்த புகாரின் பேரில் இழப்பீடாக 20 ஆயிரம் ரூபாய் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Update: 2019-12-03 10:37 GMT
நெல்லை டவுனில் உள்ள துணிக்கடையில் 11 வயதான சிறுமி மகாலட்சுமி தன் பெற்றோருடன் கடந்த 2017ல் தீபாவளி பண்டிகைக்காக துணி வாங்கியுள்ளார். ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய அந்த உடை சிறுமிக்கு பொருந்தாமல் இருந்ததால் அதனை மாற்றித் தருமாறு கடையில் சென்று கேட்டுள்ளார். ஆனால் அதை அவர்கள் மாற்றித் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட  மன உளைச்சலில் தன் தாய் மற்றும் வழக்கறிஞர் உதவியுடன் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அந்த சிறுமி. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்  துணிக்கடை நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் சிறுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 20 ஆயிரம் ரூபாயும், உடைக்கான தொகை ஆயிரம் ரூபாயையும் வழங்க உத்தரவிட்டனர். ஒரு மாத காலத்திற்குள் வழங்க தவறினால் 6 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்