காவல்துறையினரிடம் டிடிவி தினகரன் ஆவேசம்

"பாதுகாப்புக்கு வரலாம், கலவரம் செய்ய வர வேண்டாம்" - டிடிவி தினகரன்;

Update: 2019-02-09 02:28 GMT
விழுப்புரம் மாவட்டம் நயினார்பாளையம் பகுதியில் அ ம மு க துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நேற்றிரவு 11 மணியளவில் பேசி கொண்டிருந்தார். அப்போது தங்கள் கட்சி கொடி கம்பங்கள் போலீசாரால் அகற்றபட்டதாக தொண்டர்கள் தெரிவித்தனர்.இதை கேட்டு ஆவேசம் அடைந்த தினகரன், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம், மற்ற கட்சி கொடிகம்பம் இருக்கலாம் தங்கள் கட்சி கொடி இருக்க கூடாதா என  கேள்வி எழுப்பினார். மேலும், போலீசாரை  பார்த்து கடுமையாக எச்சரிக்கை விடுத்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்