வெற்றியை சமன் செய்யுமா? - இன்று களமிறங்கும் டெல்லி - குஜராத்

Update: 2024-04-17 07:51 GMT

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி - குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. குஜராத் அணி 6 போட்டிகளில் மூன்றில் வெற்றியும், 3ல் தோல்வியும் சந்தித்துள்ள நிலையில் டெல்லி அணி, 4 தோல்விகள், 2 வெற்றியை பெற்றுள்ளது. இரண்டு அணிகளுமே கடைசியாக விளையாடிய போட்டியில் வெற்றியை பதிவு செய்த நிலையில், அதனை தக்கவைக்க போராடும் என்பதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்