"இனி யாராலும் முடியாது..!" சச்சினை பின்னுக்கு தள்ளிய கிங் கோலி | IND vs NZ | ICC World Cup 2023

Update: 2023-11-16 06:20 GMT

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கோலியின் 50வது சதமாக இது அமைந்தது. 452 இன்னிங்ஸ்களில் சச்சின் 49 சதங்கள் அடித்த நிலையில், 279 இன்னிங்ஸ்களிலேயே 50 சதங்கள் அடித்து கோலி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இது மட்டுமின்றி ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிகபட்சமாக 673 ரன்கள் அடித்த சச்சினின் சாதனையையும் கோலி முறியடித்துள்ளார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் 711 ரன்கள் அடித்து கோலி முதலிடம் வகிக்கிறார். ஒரே நாளில் சச்சினின் இரட்டைச் சாதனைகளை கோலி முறியடித்து வரலாறு படைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்