``10 ஆண்டு கால ஆட்சி'' - ஒரே பதிவில் பாஜகவை வறுத்தெடுத்த CM ஸ்டாலின்
``10 ஆண்டு கால ஆட்சி'' - ஒரே பதிவில் பாஜகவை வறுத்தெடுத்த CM ஸ்டாலின்
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாஜகவின் வாஷிங் மெஷின் பாணியை ஆங்கில நாளேடு ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். பாஜகவுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 10 ஆண்டுகால பாஜக ஆட்சி, இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா? என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு பேரறிஞர் அண்ணா அன்றே சொன்ன வாசகம் நன்றாகவே பொருந்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் மோடியின் குடும்பம் என்பது, 'E.D - I.T. - C.B.I.'தான் என்று அந்தப் பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
