அரசியல்
வழிநெடுக மக்கள் கூட்டம் - பெண்களின் உற்சாக வரவேற்பில் - நெகிழ்ந்த சௌமியா அன்புமணி
தேசிய ஜனநாயக கூட்டணியில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணி பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாட்டியாம் பட்டி, காமலாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்... தர்மபுரியில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்... பாமக கௌரவ தலைவர் ஜி கே மணி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், அமமுக மாவட்ட செயலாளர் டி.கே. ராஜேந்திரன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். செல்லும் இடங்களிலெல்லாம் சௌமியா அன்புமணிக்கு மக்கள் ஆரத்தி எடுத்தும் மலர்கள் தூவியும் உற்சாக வரவேற்பளித்தனர்.
