கடவுள் அருளுடன் ஆட்டத்தை ஆரம்பித்த ஈபிஎஸ் | ADMK

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் பெரியசோரகையில் உள்ள சென்றாய பெருமாள் கோயிலில் வழிபட்ட பின், நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். கோயிலில் வழிபட்ட பின் கோயிலுள்ள பகுதியில் நடந்து சென்று, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்து அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். முன்னதாக சென்றாய பெருமாள் கோயிலுக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, கும்ப மரியாதையோடு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேர்தல் பிரசாரங்களை துவங்குவதற்கு முன்பும், முக்கிய பொறுப்புகளை ஏற்பதற்கு முன்பும், சென்றாய பெருமாள் கோயிலில் வழிபடுவதை எடப்பாடி பழனிசாமி வழக்கமாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com