ஜெயிலுக்குள் இருக்கும் கெஜ்ரிவாலுக்கு ஷாக் கொடுத்த ஆம் ஆத்மி MP.. டெல்லி அரசுக்கு எதிராக போர்க்கொடி

ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள்

டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவருமான ஸ்வாதி

மாலிவால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு

கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில் டெல்லி மகளிர்

ஆணைய ஊழியர்களுக்கு 6 மாதமாக சம்பளம்

வழங்கப்படவில்லை என்றும், மகளிர் ஆணையத்தை மாநில

அரசு சிதைத்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஆணையத்தின் பட்ஜெட் 28 சதவீதம்

குறைக்கப்பட்டுள்ளதாகவும், தலைவர் மற்றும் இரண்டு

உறப்பினர் பதவிகள் பல காலமாக காலியாக உள்ளதாக

கூறியுள்ளார். ஆணையத்தை முடக்கும் முயற்சியை

நிறுத்துமாறு கோரியுள்ளார். 

X

Thanthi TV
www.thanthitv.com