வேற லெவல் ட்விஸ்ட்... `3க்கு 3'... எதிர்க்கட்சி MLAக்களை தட்டித்தூக்கிய பாஜக... கண்கள் வேர்க்கும் காங்.,

Update: 2024-05-10 14:24 GMT

அரியானாவில் பாஜக அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறிய வேளையில் முதல்வர் நயாப் சிங் சைனி, 3 எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களோடு பேட்டியளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானாவில் பாஜக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பெறவும், பாஜக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பலம் 43 ஆக சரிந்தது. பெரும்பான்மைக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் அவசியம் என்ற சூழலில், பாஜக அரசை கலைக்க வேண்டும் என காங்கிரசும், ஜனநாயக ஜனதா கட்சியும் வலியுறுத்தியது. அதேவேளையில் ஜனநாயக ஜனதா கட்சியின் 10 எம்.எல்.ஏ.க்களில் 5 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவோடு தொர்பில் இருப்பதாக பாஜகவினர் கூறிவந்தனர். இந்த சூழலில், செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முதல்வர் நயாப் சிங் சைனி, ஏற்கனவே நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுவிட்டோம், இப்போதும் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என்றார். அவரோடு, எதிர்க்கட்சியான ஜனநாயக ஜனதா கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் உடன் இருந்தது பாஜக கூற்றை உறுதி செய்யும் வகையில் இருந்தது. அவர்கள் மூவரும் ஆதரளித்தால் பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதாக வென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்