"பிரதமர் மீது என்ன நடவடிக்கை?" - தேர்தல் ஆணையத்துக்கு காங். கேள்வி

தேர்தல் நடத்தை விதிகளை தொடர்ந்து மீறும் பிரதமர் மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தேர்தல் விதிகளை மீறியதாக பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு புகார்கள் வந்துள்ள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இதுவரை பிரதமர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, அவர் மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள காத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com