``ஞானவாபி மசூதி உள்ள இடத்தில் கோவில்கள் கட்டப்படும்'' - பரபரப்பை கிளப்பும் பாஜக குரல்

Update: 2024-05-23 06:37 GMT

தற்போது நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை 400 இடங்களில் வெற்றி பெறச் செய்தால் ஞானவாபி மசூதி உள்ள இடத்தில் கோவில்கள் கட்டப்படும் என்று அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்... பிரதமர் மோடிக்கு 400 இடங்களைக் கொடுத்தால் மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடத்திலும், வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ள இடத்திலும் கோவில்கள் எழுப்பப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீர் பகுதியும் இந்தியா வசம் கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்