காங்கிரஸ் சார்பில் களமிறங்கும் பிரபல நடிகரின் மனைவி.. "படங்களை இணையதளங்களில் ஒளிபரப்ப தடை"

கர்நாடகாவின் ஷிவமோகா மக்களவை தொகுதியில், நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா, காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் கர்நாடக பாஜக சார்பில், இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் கீதாவின் கணவரான சிவராஜ்குமார், சினிமா மூலம் மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ளதாகவும், அவர் கீதாவுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். எனவே நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை, சிவராஜ் குமார் நடித்த படங்களை திரையரங்குகளிலோ, தொலைக்காட்சிகளிலோ, இணையதளங்களிலோ ஒளிபரப்பு செய்ய தடை விதிக்கவும் பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com