ரூ.2 லட்சம் கோடி - ரிசர்வ் வங்கி முக்கிய முடிவு

Update: 2024-05-23 06:03 GMT

ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் இருந்து 2.10 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசிற்கு ஈவுத்தொகையாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற மத்திய இயக்குனர்கள் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2023-24 ம் நிதியாண்டில் 2 லட்சத்து10,874 கோடியை மத்திய அரசிற்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு புதிதாக ஆட்சிக்கு வரும் மத்திய அரசுக்கு நிதி நிலையை மேம்படுத்தும் உற்சாகமூட்டும் செய்தியாக அமைந்துள்ளது.

அரசு முன்னதாக வாங்கிய 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்தத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்