"3வது முறையாக பாஜக ஆட்சி, அதுவே மக்களின் முடிவு" - கர்ஜித்த மோடி

Update: 2024-05-26 11:23 GMT

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை, மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரவைக்க இந்திய மக்கள் முடிவு செய்து விட்டதாக தெரிவித்தார். இதற்கு முக்கிய காரணம் பாஜகவின் நல்ல எண்ணம், நல்ல கொள்கைகள் மற்றும் தேசபக்தியே என்றும் குறிப்பிட்டார். மேலும் உத்தரப்பிரதேசம் முழுவதையும் மாஃபியாக்களின் புகலிடமாக சமாஜ்வாதி கட்சியினர் மாற்றி வைத்துள்ளதாகவும், பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்