இலவச தடுப்பூசி திட்டம் தொடரும்... மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உறுதி

இலவச தடுப்பூசி திட்டம் தொடரும்... மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உறுதி

Update: 2021-04-25 08:20 GMT
இலவச தடுப்பூசி திட்டம் தொடரும்... மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உறுதி 

இலவச தடுப்பூசி திட்டம் வரும் காலங்களிலும் தொடரும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.மன் கி பாத் நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா நமது பொறுமையையும், எல்லா வரம்புகளையும் சோதித்துக் கொண்டு இருக்கிறது எனக் கூறினார்.முதல் அலையை நாடு வெற்றிகரமாக எதிர்கொண்டு தன்னம்பிக்கையுடன் இருந்த நிலையில்,கொரோனா இரண்டாவது அலை என்கிற புயல் நம் அனைவரையும் உலுக்கி விட்டது என்றார்.இந்த போரில் வெற்றியடை வேண்டும் என்ற அவர், நிபுணர்கள் மற்றும் விஞ்ஞான ரீதியிலான அறிவுரைகளுக்கு அதிக முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.கொரோனா பற்றி ஏதேனும் அச்சம் இருந்தாலும் தேவைப்படும் மருத்துவர்களிடம் ஆலோசித்து தகவல்களை பெறுமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.  நெருக்கடியான சூழலில் தடுப்பூசி பற்றிய தவறான தகவல்களுக்கு இட கொடுக்க வேண்டாம் எனவும் அது போன்று பதிவிட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி.. மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்றார். கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுக்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மத்திய அரசு தனது முழு வலிமையுடன் உதவியை வழங்குகிறது என பிரதமர் மோடி கூறினார்.மேலும் வரும் காலங்களிலும் இலவச தடுப்பூசி திட்டம் தொடரும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.



Tags:    

மேலும் செய்திகள்