"ஹெல்மட் விழிப்புணர்வுக்கான நூதன முயற்சி"

கேரள போலீஸ் நடவடிக்கைக்கு பொது மக்கள் வரவேற்பு

Update: 2019-12-03 10:43 GMT
கேரள மாநில உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, டிசம்பர் ஒன்றாம் தேதி  முதல் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு பணிகளில் கேரளா போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  அதையொட்டி, கேரளா போலீசின் அலுவலக பேஸ்புக் பக்கத்திலும், சமூக ஊடகங்களிலும் ஹெல்மெட் விழிப்புணர்வு தொடர்பாக வித்தியாசமாக  பதிவிட்டுள்ளது, மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. நாம் இரண்டு நமக்கு இரண்டு என பதிவிடப்பட்ட அந்த பதிவு, சில ஆண்டுகளுக்கு முன்பு, இரு  குழந்தைகளை மட்டும் பெற்று கொள்ளுமாறு, அரசால் பிரச்சாரம் செய்யப்பட்ட வாசகத்தை நினைவு கூர்ந்தாலும் தற்போது அந்த பிரபலமான வாசகத்தை காவல் துறை ஹெல்மெட் விழிப்புணர்வுக்கு பயன்படுத்தியிருப்பது தற்போது ஹெல்மெட் தொடர்பான  விழிப்புணர்வை மக்களிடையே விரைந்து பிரபலப்படுத்தி வருகிறது. அதோடு, இரு சக்கர வாகனத்தில் இருவரும் ஹெல்மட் அணிந்து பயணிக்கும் படத்தை இ- மெயிலில் அனுப்பினால் அவற்றில் சிறந்த படங்களை  காவல்துறையின் முகநூல் பக்கத்தில் பிரசுரிக்க உள்ளதாகவும் காவல் துறை அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் போட்டி போட்டு தங்களது ஹெல்மெட் அணிந்த படங்களை அனுப்பி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்